டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சாக்குலத்துமெட்டு வனப்பகுதியில் தனியார் கட்டுமானங்கள்: வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சாக்குலத்து மெட்டு வனப்பகுதியில் தனியார் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கிய வனத்துறையினரை கண்டித்து தேவாரத்தில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்.
Updated On :30 ஜனவரி 2021, 1:25 pm

DIN

சாக்குலத்து மெட்டு வனப்பகுதியில் தனியார் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கிய வனத்துறையினரை கண்டித்து தேவாரத்தில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாக்குலத்துமெட்டு வழியாக  கேரளத்துக்கு சாலை அமைக்க வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பகுதி வனப்பகுதி என்றும், வன விலங்குகள் பாதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் சாக்குலத்து பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கட்டுமானப் பணிகளை செய்து வருகிறது.

இதற்கு தேனி மாவட்ட வனத்துறை அனுமதி வழங்கியது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பொதுமக்கள் பாதைக்கு அனுமதி வழங்க மறுத்து, தனியார் நிறுவனத்திற்கு கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கிய வனத்துறையை கண்டித்து தேவாரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமை வகித்தார். 

Story image

தேவாரம் சுற்றுப்புற விவசாயிகள் சங்கம் சார்பில் முருகன், ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேவாரம் வர்த்தகர் சங்கம், பென்னிகுவிக் விவசாயிகள் சங்கம், இளநீர் வியாபாரிகள் சங்கம், ஏலத்தோட்ட தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, சாக்குலத்துமெட்டு வனப்பகுதியில் தனியார் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாக்குலத்துமெட்டு சாலையை அமைக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.