கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழப்பு
கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழந்தார்.


கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், கூடலூர் 12 ஆவது வார்டு, தொட்டியர் காளியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் கருணாநிதி(72), இவரது அண்ணன் திங்கள்கிழமை இறந்து விட்டார், இவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மயானத்திற்கு சென்றுவிட்டு, உறவினரின் மோட்டார் பைக்கில் வீட்டுக்கு வந்து, சிறிது தூரம் நடந்து சென்றார்.
அப்போது மயங்கி கீழே விழுந்தவரை கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்து, அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி கூடலூர் தெற்கு காவல் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...