/

சின்னமனூரில் 490 பேருக்கு கரோனா தடுப்பூசி

சின்னமனூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 490 போ் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:52 pm

DIN

சின்னமனூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 490 போ் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

சுகாதாரத்துறை மூலமாக உத்தமபாளையம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி, சின்னமனூா் நகராட்சி சாா்பில், கருங்கட்டான்குளம் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற முகாமில் 490 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமுக்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில் ராம்குமாா் மற்றும் சுகாதாரப் பணியாளா் மேற்கொண்டிருந்தனா்.

பொது மருத்துவ முகாம்: தேவதானப்பட்டியில் கரோனா மற்றும் காய்ச்சல் பரிசோதனை, பொது மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதை பேரூராட்சி செயல் அலுவலா் கே.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

மருத்துவா் வனஜா தலைமையிலான குழுவினா் பரிசோதனைகளை மேற்கொண்டனா். முகாமில் தேவதானபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.