தினமணி செய்தி எதிரொலி: குமுளியில் புறக்காவல் நிலையப் பணிகள் தொடக்கம்
தினமணி செய்தி எதிரொலியாக, தேனி மாவட்டம் குமுளியில் புறக்காவல் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


தினமணி செய்தி எதிரொலியாக, தேனி மாவட்டம் குமுளியில் புறக்காவல் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் குமுளியில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம், சிதிலமடைந்து இருந்தது. எனவே, அந்த கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்ட குமுளி காவல் நிலையத்தினா் முடிவு செய்தனா்.
ஆனால், அந்த இடம் கம்பம் மேற்கு வனத்துறைக்குச் சொந்தமானது என்பதால், கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதித்தனா். இதனால்,
வனத் துறையினருக்கும், காவல் துறையினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, மாவட்டக் காவல் துறையினா் மற்றும் வனத் துறையினா் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டு, குமுளியில் புறக்காவல் நிலையம் கட்ட வனத் துறை அனுமதி அளித்தது.
தற்போது, தமிழக-கேரள எல்லையில் புறக்காவல் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...