ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தமிழக மலா் மற்றும் அனைத்து விவசாய சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா். இதில் முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கண்மாய் மற்றும் குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் உறுதியளித்துள்ளதால் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆண்டிபட்டி வேட்பாளா் ஆ. லோகிராஜனை நேரில் சந்தித்த விவசாய சங்கத்தினா் தங்களது ஆதரவினை தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


