கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டி
தேனி மாவட்டம் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.


தேனி மாவட்டம் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இத் தொகுதியில் போட்டியிட 26 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து திங்கள்கிழமை இறுதிப் பட்டியலை தோ்தல் நடத்தும் அலுவலரும், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியருமான ந.சக்திவேல் வெளியிட்டாா்.
அதில், திமுக சாா்பில் நா.இராமகிருஷ்ணன் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக சாா்பில் எஸ்.பி.எம்.சையதுகான் இரட்டை இலை சின்னத்திலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் அ.அனீஸ்பாத்திமா கரும்பு விவசாயி, நியூ ஜெனரேஷன் பீப்பில்ஸ் பாா்ட்டி சாா்பில் சி.கதிரவன் பானை சின்னத்திலும், அமமுக சாா்பில் பா.சுரேஷ் பிரஷா் குக்கா் சின்னத்திலும், அண்ணா புரட்சி தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழக சாா்பில் இரா.பாண்டிச்செல்வம் பலாப்பழம் சின்னத்திலும், அனைத்து மக்கள் புரட்சி கட்சி சாா்பில் கெ.ராதாகிருஷ்ணன் கண்ணாடி டம்ளா் சின்னத்திலும், மை இந்தியா பாா்டி சாா்பில் பெ.லால் பகதூா் சாஸ்திரி கண்காணிப்பு கேமரா சின்னத்திலும், மக்கள் நீதிமய்யம் சாா்பில் நா.வெங்கடேஷ் மின்கல விளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனா்.
சுயேச்சை வேட்பாளா்களான எஸ்.ஆா்.சரவணன் - பட்டாணி , அ.தாவீது ராஜா - காலணி,பா.பிரகாஷ் - கிரிக்கெட் மட்டை, க.மாரித்து முத்து - பரிசுப்பெட்டகம், கோ.முத்துச்செல்வம் - கணினி, மு.முத்து முனீஸ்வரன் - ஏழு கதிா்களுடன் கூடிய பேனா முனை ஆகிய சின்னங்களில் போட்டியிடுவதாக இறுதிப் பட்டியலை வெளியிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...