விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூடலூரில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கூடலூரில் இரண்டு பேர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

News image
Updated On :29 மார்ச் 2021, 7:18 am

DIN

கூடலூரில் இரண்டு பேர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், கூடலூர் 4 வது வார்டு கருப்பசாமி கோயில் தெருவில் ஒரு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது, சோதனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. மருத்துவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர், ஆனால் குழந்தையின் பெற்றோர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

இதோ போல் 14 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றி கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் முருகன் கூறும் போது, 4 ஆவது வார்டில் 2 பேருக்கு டெங்கு அறிகுறி ஏற்பட்டதைத்தொடர்ந்து, சுகாதார அலுவலர்கள், கிராம செவிலியர்கள் முகாமிட்டு வீடு வீடாக சென்று, காய்ச்சல்  யாருக்கும் உள்ளதா என்று சோதனை செய்து வருகின்றனர் என்றார். 

இது பற்றி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், 4 ஆவது வார்டு உள்பட அனைத்து பகுதிகளிலும், தண்ணீர் குளோரினேசன் செய்து வருகிறோம், வீடு வீடாகச்சென்று சுகாரார ஊழியர்கள் தண்ணீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதா, அதில் கொசுக்கள் என்று ஆய்வு செய்து, தண்ணீரில் மருந்து தெளித்து அறிவுறுத்தி வருகின்றனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.