விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேனி: சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடக்கம்

வடவீரநாயக்கன்பட்டியில் தமிழக அரசு உத்தரவின்பேரில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
வடவீரநாயக்கன்பட்டியில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம்.
Updated On :10 மே 2021, 9:41 am

DIN

வடவீரநாயக்கன்பட்டியில் தமிழக அரசு உத்தரவின்பேரில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டியில், கரோனா தொற்றாளர்களுக்காக சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு, பிரமானந்த பைரவ மாத்திரை மற்றும் அமுக்கரா மாத்திரை இருமல், இரைப்பிற்கு ஆடாதோடை மணப்பாகு, திரிகடுகு சூரணம், தாளிசாதி சூரணம் கொடுக்கப்படுகிறது.

கடின மூச்சிற்கு திப்பிலி ரசாயனம், வயிற்றுப் போக்கிற்கு ஓமத்தீநீர், மூக்கடைப்பு மற்றும் மணமின்மைக்கு வசந்த குசுமாகர மாத்திரை, போன்ற மருந்துகள் வழங்கப்படும். சிறுவர் சிறுமிகளுக்கு என பால சஞ்சீவி மாத்திரை, உரை மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், போன்ற மருந்துகள், அவர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது. சித்த மருத்துவ சிகிச்சை பணியில் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவர் சிராஜ் தீன், மருத்துவர் நவீன் குமார் 4 செவிலியர்கள், 15 அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் காலையில் சித்த யோகப்பயிற்சி, காந்தி சுட்டிகை என்னும் சூரியக்குளியல், மாலையில் எளிய நடைப்பயிற்சி, இரவில் தினம் ஒரு பாடம், உடல்நல மனநலக் கல்வி, உடல் தகுதியை நிர்வாகித்தல், சிகிச்சை பிறகு உடலை பராமரித்தல்,  சித்த மருத்துவ உணவியல் வாழ்வியல் பயிற்சிகள், மனம் விட்டு பேசும் நிகழ்ச்சிகள், வாழ்வியல் நோய்கள் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் தினம் ஒரு பாடம் தொற்றாளர்களுக்கு நடத்தப்படும் என்று சித்த மருத்துவர் சிராஜுதீன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.