பெரியகுளம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளதால் பெரியகுளம் பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினர் இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பகுதி மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விட்ட பெரியகுளம் வருவாய்த்துறையினர் மற்றும் பணியாளர்கள்.

தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மே 14 முதல் 16 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது. தற்போது அகமலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணைக்கு 57 அடி நீர்வரத்து உள்ளதால் இன்று காலை சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளவான 126 அடி உயரத்தை எட்டியது.

தேனி மாவட்டத்திற்கு வானிமையத்தால் ரெட் அலார்ட் விடப்பட்டுள்ள காரணமாக அதிக மழை பெய்யும் என்பதால் வராகநதியின் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இன்று ஒலிப்பெருக்கி மூலம் பெரியகுளம் மற்றும் ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com