மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஆறுதல் தெரிவித்தனர்.

News image
ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்.
Updated On :23 மே 2021, 10:58 am

DIN

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஆறுதல் தெரிவித்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிப்பால் இறந்தார். இது குறித்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டி பண்ணை வீட்டில் இன்று தங்கியிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்மொழித்தேவன், வானூர் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் அர்ஜுனன், கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு, உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.