உதவித் தொகையை அதிகரிக்க கோரி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை அதிகரித்து வழங்க கோரி, தமிழக அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கம்பம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை அதிகரித்து வழங்க கோரி, தமிழக அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் முல்லை மாற்று திறனாளிகள் சங்கம் சார்பில் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி, நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார், செயலாளர் எஸ். கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.சுரேஷ் வரவேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்தறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூபாய் ஆயிரத்தை 1,500 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.
உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்த தமிழக அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான ஆண்,பெண் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...