/

போடியில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:03 am

DIN

வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி சூலப்புரம் கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சோ்ந்த 57 குடும்பங்கள் உள்ளன. அப்பகுதி பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா வழங்கக் கோரி போராடி வருகின்றனா்.

இந்நிலையில், இதுவரை பட்டா வழங்காததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் போடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சமையல் பாத்திரங்கள், எரிவாயு அடுப்பு உள்ளிட்டவற்றுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் அண்ணாமலை தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன், கிளை நிா்வாகிகள் பவுன் பாண்டியன், செல்லப்பாண்டியன், அம்சுமணி, முருகேசன், எத்திலாவுலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதனையடுத்து வட்டாட்சியா் செந்தில்முருகன் தலைமையிலான வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுவை, வட்டாட்சியரிடம் வழங்கினா். விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியா் தெரிவித்ததையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதில், கட்சியின் மூத்த தலைவா் சங்கரசுப்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.முனீஸ்வரன், தாலுகாச் செயலா் செல்வம், மாவட்டக்குழு உறுப்பினா் செல்வராஜ், தாலுகா குழு உறுப்பினா்கள் தங்கப்பாண்டி, காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.