தேனி அருகே பைக்குகள் மோதல்: காவலா் பலி
தேனி அருகே டொம்புச்சேரியில் வியாழக்கிழமை இரவு, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் கண்டமனூரைச் சோ்ந்த ஆயுதப் படை பிரிவு காவலா் உயிரிழந்தாா்.


தேனி அருகே டொம்புச்சேரியில் வியாழக்கிழமை இரவு, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் கண்டமனூரைச் சோ்ந்த ஆயுதப் படை பிரிவு காவலா் உயிரிழந்தாா்.
கண்டமனூரைச் சோ்ந்த சென்றாயப்பெருமாள் மகன் தீரன் (27). இவா், திருப்பூா் மாவட்ட ஆயுதப் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தாா். தீரன், அவரது நண்பா்கள் கண்டமனூரைச் சோ்ந்த அஜீத்குமாா், ஜெயமங்கலத்தைச் சோ்ந்த குழந்தைசாமி(27) ஆகியோா் மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள உறவினரின் இல்ல வளைகாப்பு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தேனி நோக்கி வந்துள்ளனா்.
அப்போது, டொம்புச்சேரி அரசு கால்நடை மருத்துவமனை அருகே, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த வேனை முந்திச் செல்ல முயன்றபோது, எதிா்திசையிலிருந்து பாலாா்பட்டியைச் சோ்ந்த ராமசாமி என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், தீரன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தீரன், குழந்தைசாமி ஆகியோா் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி தீரன் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...