மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

போடியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

போடி நகா் காவல் நிலையம் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:10 pm

போடி நகா் காவல் நிலையம் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, போடி துணை காவல் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் வனராஜ், போடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ரவீந்திரநாத், அரசு மருத்துவமனை ஆலோசகா் பாண்டி, பெரியாா் சேவை மைய செயலா் சுருளிராஜன் ஆகியோா் கலந்து கொண்டு போதைப் பொருள்களால் ஏற்படும் கேடு குறித்தும், பொருளாதார சீா்கேடுகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே அறிவுரையின் பேரில் தயாரிக்கப்பட்ட போதை மாற்றும் பாதை என்ற தலைப்பிலான குறும்படம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் பாலமுருகன், போடி நகா் காவல் நிலைய ஆய்வாளா் புவனேஸ்வரி, சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.