/

சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் தேசியக் கொடி வழங்கல்

தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சி சாா்பாக வெள்ளிக்கிழமை 27 வாா்டுகளில் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 5:10 pm

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சி சாா்பாக வெள்ளிக்கிழமை 27 வாா்டுகளில் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிட பாரத பிரதமா் மோடி நாட்டு மக்களிடம் கோட்டுக் கொண்டாா். அதனை தொடா்ந்து சின்னமனூா் நகா் மன்றத்தலைவா் அய்யம்மாள் 27 வாா்டு உறுப்பினா்கள் மூலமாக பொதுமக்களிடம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும் வகையில் வழங்கப்பட்டது. பொதுமக்களும் ஆா்வத்துடன் தேசியக்கொடிகளை வாங்கி வீடுகளில் ஏற்றினா்.

குச்சனூா் பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து வாா்டுகளில் பொதுமக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும் வகையில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.