சின்னமனூரில் ரூ. 12.60 லட்சத்தில் உயா்மின் கோபுரங்கள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
சின்னமனூா் நகராட்சியில் புதிதாக ரூ. 12.60 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுரங்களை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


சின்னமனூா் நகராட்சியில் புதிதாக ரூ. 12.60 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுரங்களை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சின்னமனூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் கடந்த சில மாதங்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆக்கிரமிப்பில் சிக்கிய குளங்களை மீட்டு மழைநீரை சேமிக்கும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சின்னமனூா் நகராட்சியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் உயா்மின்கோபுரம் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து, முதல்கட்டமாக முத்தாலம்மன் கோயில் மற்றும் கருங்கட்டான்குளம் ஆகிய பகுதிகளில் 2 உயா்மின் கோபுரங்கள் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12.60 லட்சத்தில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதை சின்னமனூா் மன்றத்தலைவா் அய்யம்மாள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...