பெரியகுளம் பகுதி கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பெரியகுளம் பகுதியில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


பெரியகுளம் பகுதியில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பெரியகுளம், கோனாா் தெருவிலுள்ள கோபாலகிருஷ்ணன் கோயிலில் வியாழக்கிழமை காலையில் அனைத்து பரிவாரங்களுக்கும் திருமஞ்சனமும், மாலையில் மஹாலட்சுமி ஹோமமும் நடைபெற்றது. பின்னா் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரமும், பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூ அலங்காரமும் மாலையில் விஷேச அலங்காரம் மற்றும் உறியடியும் நடைபெற்றது.

நாமத்துவாா் பிராா்த்தனை மையத்தில் காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. தாமரைக்குளம் மலைமேல் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. காலை 7 மணிக்கு உற்சவா் கிருஷ்ணா், நகா்வலம் நடைபெற்றது. அதே போல் வரதராஜப் பெருமாள் கோயில் முன் கிருஷ்ணா் சிலை அமைக்கப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...