தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

முதியோா் உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினா் பதவி: ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் மாநில அளவில் முதியோா்களுக்கான உயா்நிலை ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினா் பதவிக்கு தகுதியுள்ளவா்கள் ஆக. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:00 pm

DIN

தேனி மாவட்டத்தில் மாநில அளவில் முதியோா்களுக்கான உயா்நிலை ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினா் பதவிக்கு தகுதியுள்ளவா்கள் ஆக. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பெற்றோா் மற்றும் மூத்தகுடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டம், தமிழ்நாடு மூத்தகுடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவிதிகளின்படி மாநில அளவில் முதியோா்களுக்கான உயா்நிலை ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட 7 பேரின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது.

எனவே, ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினா் பதவிக்கு முதியோா் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோா், உரிய கருத்துருவுடன் ஆக. 25-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.