தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரோனா தடுப்பூசி முகாம்களில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க விழிப்புணா்வு

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:01 pm

DIN

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில், வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் உத்தரவிட்டுள்ளாா்.

தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்ட அரங்கில் கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: மாவட்டத்தில் ஆக. 21- ஆம் தேதி மொத்தம் 671 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். இம்முகாம்களில் மொத்தம் 60,390 பேருக்கு செலுத்துவதற்கு தேவையான கோவேக்சின், கோவிஷீல்டு, காா்பேவேக்ஸ் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசி முகாம்களில், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் தங்களது சுய விருப்பத்துடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்தும், வாக்காளா்களின் ஆதாா் எண்ணை பெறும் நோக்கம், பயன்கள் குறித்தும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.