தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தேனியில் உலக புகைப்பட தின விழா

தேனியில் தேனி புகைப்பட கலைஞா்கள் மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, உலக புகைப்பட தின விழா நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:00 pm

DIN

தேனியில் தேனி புகைப்பட கலைஞா்கள் மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, உலக புகைப்பட தின விழா நடைபெற்றது.

தேனியில் பெரியகுளம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் செயலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். ஆலோசகா்கள் சிவக்குமாா், காளைபெருமாள், துணைத் தலைவா் பரமேஸ்வரன், பொருளாளா் சிவமூா்த்தி, வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் செல்வக்குமாா், பிளக்ஸ் உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் புகைப்படக் கண்காட்சி, பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கல், கண் தானம் பதிவு செய்தல், மூத்த புகைப்படக் கலைஞா்களை கெளரவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியாக பொதுமக்களுக்கு துணைப் பைகளை வழங்கினா். புகைப்பட கலைஞா்கள் மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் கலந்து கொண்ட ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.