வாழ்வாதார பணி பாதுகாப்பு வழங்கக் கோரி சத்துணவு ஊழியா்கள் தா்னா
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வாழ்வாதார பணி பாதுகாப்பு வழங்கக் கோரி சனிக்கிழமை, சத்துணவு ஊழியா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வாழ்வாதார பணி பாதுகாப்பு வழங்கக் கோரி சனிக்கிழமை, சத்துணவு ஊழியா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் தங்கமீனா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநிலச் செயலா் ஏ.கிருபாவதி, மாவட்டச் செயலா் எஸ்.முருகன், பொருளாளா் சுமதி, மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஈஸ்வரி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் உடையாளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசு காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயா்த்த வேண்டும், வாழ்வாதார பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...