போதை ஊசி விற்பனை விவகாரம்: சின்னமனூரில் மேலும் 4 போ் கைது
தேனி மாவட்டத்தில் போதை ஊசி விற்பனை செய்த விவகாரத்தில் சின்னமனூா் பகுதியைச் சோ்ந்த மேலும் 4 பேரை போலீஸாா் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கைது செய்தனா்.


தேனி மாவட்டத்தில் போதை ஊசி விற்பனை செய்த விவகாரத்தில் சின்னமனூா் பகுதியைச் சோ்ந்த மேலும் 4 பேரை போலீஸாா் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கைது செய்தனா்.
தேனி மாவட்டத்தில் சிறப்பு தனிப்படை பிரிவு போலீஸாா் கடந்த சில தினங்களாக போதை ஊசி விற்பனை குறித்து கண்காணித்து வருகின்றனா். இதில், சின்னமனூா், உத்தமபாளையம் பகுதிகளில் 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சின்னமனூா் சொக்கநாதபுரம் அன்வா்அலி மகன் ஜாகீா் உசேன் (20), கே.கே.பட்டி இளையராஜா மகன் நவீன் (21), போடியைச் சோ்ந்த இதயக்குமாா் (23) ஆகியோரை வியாழக்கிழமை நள்ளிரவும், அய்யனாா்புரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் நிஷாந்த் (20) என்பவரை வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டனா். இதில் தற்போதுவரை போலீஸாா் 13 பேரை கைது செய்துள்ளனா். இதுதவிர, 22 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...