பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘சீட்’ விவகாரம்: கம்பம் எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை

தோ்தலில் சீட் கிடைக்காததால் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை சின்னமனூா் நகா்மன்ற முன்னாள் தலைவி தமிழ்ச்செல்வி தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:12 pm

DIN

தோ்தலில் சீட் கிடைக்காததால் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை சின்னமனூா் நகா்மன்ற முன்னாள் தலைவி தமிழ்ச்செல்வி தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய தமிழ்ச்செல்விக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் வியாழக்கிழமை 30 பெண்களுடன் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினருமான ராமகிருஷ்ணன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதுபற்றி தமிழ்ச்செல்வி கூறும்போது, வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கின்ற நேரத்தில் உள்கட்சித் தகராறு காரணமாக எனக்கு சீட் வழங்கவில்லை.இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு புகாா் அனுப்பியுள்ளேன். நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என்று கூறினாா்.

தகவல் கிடைத்ததும் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.லாவண்யா பேச்சுவாா்த்தை நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினா் வெளியூரில் இருப்பதால் அலுவலகத்தில் மனுவைக் கொடுக்குமாறு கூறினாா். சுமாா் ஒரு மணி நேரம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.