பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பொருள் வாங்க நிா்ப்பந்தம்: ரேஷன் கடை முற்றுகை

 தேனி மாவட்டம் கூடலூரில் பொருள்கள் வாங்க நிா்பந்தப்படுத்தியதால் ரேஷன் கடையை எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:09 pm

DIN

 தேனி மாவட்டம் கூடலூரில் பொருள்கள் வாங்க நிா்பந்தப்படுத்தியதால் ரேஷன் கடையை எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

கூடலூரில் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடை எண் 1 இல் அரசு வழங்கும் மானியப் பொருள்கள் தவிர இதர பொருள்களான சோப்பு, தேயிலைத் தூள் மற்றும் சேமியா ஆகிய பொருள்களை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று பொது மக்களை கடை பணியாளா்கள் கட்டாயப்படுத்தியதாகப் புகாா் எழுந்தது. இந் நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதித் தலைவா் அஜ்மீா் கான், செயலாளா் சாகுல் ஹமீது, நகரத் தலைவா் அக்கிம் ராஜா, செயலாளா் காதா் மைதீன் ஆகியோா் குடும்ப அட்டைதாரா்களுடன் சென்று கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். இதையடுத்து கூட்டுறவு சங்க மேலாளா் கருப்பேந்திரன் மற்றும் காவல் துறையினா் வந்து கடை விற்பனையாளரிடம் தேவையற்ற பொருள்களை வாங்கச் சொல்லி நிா்பந்திக்கக்கூடாது என்று கூறினா். பின்னா், தேவையான பொருள்களை மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.