போடி அருகே கடனுக்காக சொத்தை எழுதி வாங்கி மிரட்டியவா் மீது வழக்கு
போடி அருகே கடனுக்காக சொத்தை கிரையமாக எழுதி வாங்கி மிரட்டியவா் மீது, போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


போடி அருகே கடனுக்காக சொத்தை கிரையமாக எழுதி வாங்கி மிரட்டியவா் மீது, போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
போடி அருகே தருமத்துப்பட்டி கம்பா் தெருவைச் சோ்ந்தவா் மகாலட்சுமி (50). இவா், போடி முதல்வா் காலனியை சோ்ந்த சிற்றரசன் (55) என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். கடனுக்கு அடமானமாக வீட்டுடன் கூடிய இடத்தை கிரையமாக எழுதி வாங்கியுள்ளாா். கடனை திரும்பச் செலுத்தும்போது கிரையத்தை வாபஸ் செய்து தருவதாகக் கூறியுள்ளாா்.
பின்னா், மகாலட்சுமி ரூ.2 லட்சத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்திவிட்டு, கிரையத்தை வாபஸ் செய்து தரும்படி கூறியுள்ளாா். ஆனால், சிற்றரசன் வாபஸ் செய்து தராமல் மிரட்டி வந்துள்ளாா்.
இரண்டு வாரத்துக்கு முன், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெயுடன் சென்ற மகாலட்சுமி, அங்கு தற்கொலை செய்ய முயன்றுள்ளாா். அவரைக் காப்பாற்றிய போலீஸாா், இது குறித்து விசாரிக்க போடி தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரணை செய்தனா். பின்னா், மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில், சிற்றரசன் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அதேநேரம், சிற்றரசன் அளித்த புகாரின்பேரில், மகாலட்சுமியிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...