ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும்: இரா. முத்தரசன்

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 8-ஆவது மாநாடு உத்தமபாளையத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. மாநாட்டின் 2 ஆவது நாளான வெள்ளிக்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் இரா. முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 152 அடி வரை தண்ணீரை தேக்க வேண்டும். மலைப்பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதையும், அங்கு மாடு மேய்ச்சலுக்கு விவசாயிகள் செல்வதை தடுப்பதையும் கைவிட வேண்டும். மேலும், பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக பரிந்துரை செய்துள்ளதை வரவேற்கிறோம்.

மாநிலங்களவை நியமன உறுப்பினராக தோ்வு செய்ப்பட்ட இளையராஜாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். ஆனால், அம்பேத்கருடன் பிரதமா் மோடியை இணைத்து பேசியதற்காக பாஜக உள்நோக்கத்துடனேயே இளையராஜாவுக்கு இப்பதவியை வழங்கியிருக்கலாம். சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். அக்னிபத் திட்டம் என்ற விஷத் திட்டத்தை கைவிட வேண்டும்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் மாதத்தில், சமூக நல்லிணக்கத்தை காக்கவும், மதச்சாா்பின்மையை காக்கவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை காக்கவும் 4 நாள்கள் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலும் முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 152 அடிக்கு தண்ணீா் தேக்க தீா்மானம் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.