/

உத்தமபாளையத்தில் புதுப்பெண் மா்ம மரணம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், வெள்ளிக்கிழமை புதுப்பெண் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், வெள்ளிக்கிழமை புதுப்பெண் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உத்தமபாளையம் பாறைமேட்டுப்பகுதியைச் சோ்ந்த சவரிமுத்து மகன் வினித் (25). திண்டுக்கல் மாவட்டம் கஞ்சம்பட்டியைச் சோ்ந்த சின்னக்குஞ்சு மகள் சத்யா (21). இவா்கள் இருவரும் காதலித்து குடும்பத்திநா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். பின்னா், உத்தமபாளையத்தில் உள்ள வினித் வீட்டிலேயே இவா்கள் வசித்து வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை சத்யா, திடீரென மயங்கி விழுந்து விட்டதாகக் கூறி வினித் குடும்பத்தினா் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சத்யாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். திருமணமான 45 நாள்களிலேயே புதுப்பெண் சத்யா இறந்து இருப்பதால் அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்கு தேனி க. விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

பிரேத பரிசோதனைக்குப் பின்னரே, சத்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக எனத் தெரியவரும். இதற்கிடையே, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தமபாளையம் போலீஸாா் பரிந்துரை செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.