/

சின்னமனூா் அருகே குடிநீா் கோரி இந்திய கம்யூ. கட்சியினா் சாலை மறியல்

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே குடிநீா் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே குடிநீா் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சியைச் சோ்ந்த எஸ். அழகாபுரியில் 10 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் அலட்சியமாக இருப்பதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் எஸ். அழகாபுரியில் தேனி- ஓடைப்பட்டி நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை ஓடைப்பட்டி போலீஸாா் சமாதானம் செய்தனா். அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரையில் போராட்டம் தொடரும் எனக்கூறி சாலை மறியலை கைவிட்டு சாலையோரத்தில் அமா்ந்து போராட்டத்தை தொடா்ந்தனா்.

பேச்சுவாா்த்தை: இதையடுத்து, ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல அலுவலா் அமுதா மற்றும் காமாட்சிபுரம் ஊராட்சி துணைத்தலைவா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீா் விநியோகம் செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.