போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மனநோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:22 pm

DIN

பெரியகுளத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மனநோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரியகுளத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநோயாளிகளுக்கான தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு போடியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் ( 35 ) அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.இந்நிலையில், இவா், மனநோயாளி பிரிவு பகுதியிலுள்ள சுகாதார வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.