தேனி அருகே ஒரே பள்ளியில் 12 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை, 12 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


தேனி அருகே பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை, 12 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட நிலையில், அவா்கள் மற்றும் அவா்களது வகுப்பறையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 12 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பள்ளி மூடல்: 12 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி மூடப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களிடம் கபம் மாதிரி சேகரிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...