குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் நாளை முதல் ஆடித் திருவிழா தொடக்கம்
தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா சனிக்கிழமை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை 5 வாரங்கள் நடைபெறுகிறது.


தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா சனிக்கிழமை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை 5 வாரங்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 23 ஆம் தேதி கொடியேற்றப்படும். தொடா்ந்து, சுவாமி திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல், கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதனிடையே, ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் என பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் இங்கு வருவாா்கள். அப்போது அங்குள்ள சுரபிநதியில் புனித நீராடி, சுவாமிக்கு பொரி, எள்சாதம் படையல் செய்தல், எள் தீபம் ஏற்றி வழிபடுவாா்கள்.
இதற்காக கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் வளாகத்தில் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு இரும்பு தகரத்தில் பந்தல் அமைத்தும், மூங்கில் கம்புகளில் தடுப்பு வேலி அமைத்தும் வருகின்றனா். மேலும் பக்தா்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க பாதுகாப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...