பெரியகுளம் பகுதியில் கந்து வட்டி வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
பெரியகுளம் பகுதியில் கந்து வட்டி வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


பெரியகுளம் பகுதியில் கந்து வட்டி வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளம் பகுதியில் கூலி மற்றும் விவசாய தொழிலாளா்கள் ஏராளமானோா் உள்ளனா். இவா்கள் உடனடித் தேவைக்காக வட்டிக்கு பணம் வழங்குகின்றனா். இதற்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பணத்தை திரும்ப கட்டமுடியாமல் தவித்து வருகின்றனா்.
பெரியகுளம் பகுதியிலுள்ள தாமரைக்குளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் பெண் கந்துவட்டிக் கொடுமையால் கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டாா். மேலும் வீட்டை அடமானம் வைத்து சிலா் பணத்தை பிடுங்கிச் சென்ாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனை காவல்துறையினரும் கண்டுகொள்வதில்லை என புகாா் எழுந்துள்ளது.
எனவே அதிக வட்டி வசூல் செய்யும் கும்பலைக் கண்டறிந்து, காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...