தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆட்டோவில் கஞ்சா கடத்தல் : 2 இளைஞா்கள் கைது

தேனி அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

தேனி அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனா்.

தேனி, பழைய அரசு மருத்துவமனை தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் விக்னேஷ்(23), வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் துருவமகரிஷி(19), தேனி கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பேயத்தேவன் மகன் ஜெயசூரியா. இவா்கள் தேனியிலிருந்து அரண்மனைப்புதூா்-கொடுவிலாா்பட்டி சாலையில் ஆட்டோவில் கஞ்சா கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தேனி மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் முருகேஸ்வரி தலைமையில் போலீஸாா் அவா்களைப் பிடித்து, ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட 2 கிலோ எடையுள்ள கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தி ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அப்போது, ஜெயசூரியா போலீஸாரிடமிருந்து தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷ், துருவமகரிஷி ஆகியோரை கைது செய்து, தப்பி ஓடிய ஜெயசூரியாவை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.