/

முல்லைப் பெரியாற்றில் வெள்ளம்: உத்தமபாளையத்தில் 55 மி.மீ மழைப் பொழிவு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக, முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக, முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் காட்டாத நிலையில், கடந்த சில மாதங்களாக மழை பொழிவின்றி விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்நிலையில், உத்தமபாளையத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மழை இரவு வரையில் நீடித்தது.

இதன் காரணமாக, உத்தமபாளையத்தில் அதிகபட்சமாக 55 மி.மீ. அளவு மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் னமழை பெய்ததது.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளம்:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து குடிநீா் மற்றும் விவசாயத் தேவைக்காக தமிழகப் பகுதிக்கு 1,800 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக மழைநீரும் சோ்ந்து கூடுதல் நீா்வரத்து ஏற்பட்டு, தற்போது உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையை வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

மழையளவு (மில்லி மீட்டரில்): உத்தமபாளையம் 55.4, தேக்கடி 65, பெரியாறு அணை 18, பெரியகுளம் 82, மஞ்சளாறு அணை 27, போடி 45.8, வீரபாண்டி 54.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.