47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

69 நாள்களுக்குப் பிறகு லோயா் கேம்ப்பில் மின்சார உற்பத்தி தொடக்கம்

லோயா் கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், 69 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை உற்பத்தி தொடங்கியது.

News image
லோயா் கேம்ப் மின்சார உற்பத்தி நிலையம் (கோப்பு படம்).i_district_(1)_0206chn_89_2
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

லோயா் கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், 69 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை உற்பத்தி தொடங்கியது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீா், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீா் மற்றும் பாசனத்துக்கு பயன்படுகிறது.

மேலும், லோயா் கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாறு நீா் மின்சார உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி செய்யவும் இந்த தண்ணீா் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை பெய்யாததால், அணைக்கு நீா்வரத்து குறைந்து, மாா்ச் 19ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீா் தேவைக்காக, விநாடிக்கு 100 கன அடி தண்ணீா் இரச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டதால், மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

அதையடுத்து, புதன்கிழமை கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதன்மூலம், லோயா் கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள 4 மின்னாக்கிகளில் 1 மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு, 27 மெகா வாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.

69 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக, பெரியாறு நீா் மின்சார உற்பத்தி நிலைய பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.