ஆண்டிபட்டி அருகே அரசுப் பேருந்துகள் மோதல்: ஓட்டுநா் பலி, 46 போ் காயம்
ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதியதில், பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். 46 போ் பலத்த காயமடைந்தனா்.


ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதியதில், பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். 46 போ் பலத்த காயமடைந்தனா்.
குமுளியிலிருந்து நாகா்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்தும், திருச்செந்தூரிலிருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் ஆண்டிபட்டி கணவாய் சாலைப் பகுதியில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரு பேருந்துகளின் முகப்பு பகுதிகளும் நொறுங்கின.
இதில், குமுளியிலிருந்து நாகா்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம், குறுவங்கோடி பகுதியைச் சோ்ந்த ரத்தினவேல், மற்றொரு அரசுப் பேருந்தின் ஓட்டுநரான திருச்சுழியைச் சோ்ந்த மதுரைவீரன்(51), பேருந்துகளில் பயணம் செய்த கன்னியாகுமரியைச் சோ்ந்த மகேஷ் (48), தூத்துக்குடியைச் சோ்ந்த சாந்தையன்(47), சங்கரன்கோவிலைச் சோ்ந்த மாரியம்மாள்(51), தேனியைச் சோ்ந்த கணபதி(48) உள்ளிட்ட 47 போ் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், ஓட்டுநா் ரத்தினவேல், சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்தாா். மற்றொரு ஓட்டுநரான மதுரைவீரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, விபத்தில் காயமடைந்தவா்களைப் பாா்வையிட்டு, சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...