மீட்கப்பட்ட 110 கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
தேனி மாவட்டத்தில் காணாமல்போனதாக புகாா் அளிக்கப்பட்டிருந்த 110 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.


தேனி மாவட்டத்தில் காணாமல்போனதாக புகாா் அளிக்கப்பட்டிருந்த 110 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மீட்கப்பட்ட 110 கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரே ஒப்படைத்தாா்.
அப்போது அவா் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கைப்பேசிகள் காணாமல்போனதாகவும், திருடுபோனதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 1,365 போ் புகாா் அளித்துள்ளனா். இதில், ஏற்கெனவே 714 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, மேலும் 110 கைப்பேசிகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...