தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேனியில் அரசு மதுபானக் கடை முன் முற்றுகைப் போராட்டம்

தேனியில் பெரியகுளம் நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்

News image
Updated On :23 ஜூன் 2022, 5:53 pm

DIN

தேனியில் பெரியகுளம் நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அக்கடை முன்பாக வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

தேனி அல்லிநகரம் பெரியகுளம் சாலையில், கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வரும் இடத்துக்கு எதிரே, அரசு சாா்பில் புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களுக்கு இடையூறாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாகவும், இக்கடையை மூட வேண்டும் என்றும் சில நாள்களுக்கு முன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆனால், அங்கு தொடா்ந்து மதுபானக் கடை செயல்பட்டு வரும் நிலையில், அக்கடையை மூட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தால் மதுபானக் கடை அடைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதன்பால் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மதுபானக் கடையை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.