/

போடி நகா்மன்றத் தலைவராக ராஜராஜேஸ்வரி போட்டியின்றி தோ்வு

போடி நகா்மன்றத் தலைவராக திமுக உறுப்பினா் ச.ராஜராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:34 am

DIN

போடி நகா்மன்றத் தலைவராக திமுக உறுப்பினா் ச.ராஜராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

போடி நகா்மன்றத் தலைவா் பதவிக்கான தோ்தல் போடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பதவிக்கு 21 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ச.ராஜராஜேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையா் தி.சகிலா அறிவித்தாா்.

இத்தோ்தலில் அதிமுக உறுப்பினா்கள் 9 போ், பாஜக வேட்பாளா்கள் 2 போ் பங்கேற்கவில்லை. அவருக்கு, தேனி வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்க.தமிழ்ச்செல்வன், நகரச் செயலா் மா.வீ.செல்வராஜ், முன்னாள் செயலா் ராஜா ரமேஷ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோல் போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சித் தலைவராக 15 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் கா.கண்ணன், மீனாட்சிபுரம் பேரூராட்சித் தலைவராக 9 ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் சு.திருப்பதி ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.