கம்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மருத்துவர் வர தாமதமானதால் பயனாளிகள் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கம்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ஆர்ப்பாட்டம்.
கம்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ஆர்ப்பாட்டம்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மருத்துவர் வர தாமதமானதால் பயனாளிகள் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள உத்தமபுரம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் மாற்றுத்தறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் கலந்து கொள்ள ஆண், பெண், மாற்று திறனாளிகள் காலை 8 மணி முதலே வரத்தொடங்கினர். இவர்களை பரிசோதித்து இவர்களது உடல் ஊனம் எத்தனை சதவீதம் என்று குறித்து அடையாளப்படுத்துவது மருத்துவர் என்பதால் அவருக்காக காத்திருந்தனர்.

சுமார் 12 மணி ஆகியும் மருத்துவர் வரவில்லை. இதனால் ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் அவதி அடைந்தனர். மருத்துவரைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் முகாமில் ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கமிட்டனர்.

அங்கிருந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா அவர்களிடம் கூறும்போது, இரவு பணி காரணமாக மருத்துவர் வர தாமதமாகியுள்ளது, வந்துவிடுவார் என்று சமாதானப்படுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் திடீரென்று அதன் பயனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com