கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆட்சியா் ஆய்வு
தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே கோயில் இடம் ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே கோயில் இடம் ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சின்னமனூா் அருகே சீப்பாலக்கோட்டையில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காத்தவராயன்- திம்மம்மாள் கோயில் உள்ளது. இக்கோயில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி, சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்பு குறித்து ஆட்சியா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு ஒத்திவைத்தாா்.
அதன்படி வெள்ளிக்கிழமை, கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது , கோட்டாட்சியா், வட்டாட்சியா், வருவாய் துறை அதிகாரிகள் மூலமாக ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயில் கட்டப்படவில்லை என்பது உறுதியானது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...