கூடலூர் காளியம்மன் கோயில் திருவிழா கொடி கம்பம் நாட்டப்பட்டது

தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன் கிழமை கொடி கம்பம் நாட்டப்பட்டது.
கூடலூர் காளியம்மன் கோயில் திருவிழா கொடி கம்பம் நாட்டப்பட்டது

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன் கிழமை கொடி கம்பம் நாட்டப்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூரில்  அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா வரும் மே 17,18 ஆகிய இரண்டு நாள்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், அரிவாள் எறி அருள்வாக்கு கூறும் நிகழ்வு உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது. பொங்கல் விழாவிற்காக புதன் கிழமை கொடி கம்பம், கோயில் வளாகத்தில் நாட்டப்பட்டது.

முன்னதாக கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருந்ததியர் சமுதாய பொறுப்பாளர்கள்  செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com