கம்பம் வாரச்சந்தை வியாபாரிகள் நகராட்சியை கண்டித்து  உள்ளிருப்பு போராட்டம்

தேனி மாவட்டம் கம்பத்தில்  வாரச்சந்தை வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கம்பம் நகராட்சி வாரச்சந்தையில் போராட்டம் நடத்திய வியாபாரிகள்.
கம்பம் நகராட்சி வாரச்சந்தையில் போராட்டம் நடத்திய வியாபாரிகள்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில்  வாரச்சந்தை வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் நகராட்சிக்கு சொந்தமான  வாரச்சந்தை வடக்கு பகுதியில், உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பலசரக்கு மற்றும் காய்கறிகள் விற்பனை நடைபெறும். கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பொருள்களை வாங்கி செல்வார்கள்.

பழமையான வாரச்சந்தை என்பதால் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.75 கோடி மதிப்பில் 237 கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், சுகாதார வளாகம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்த சந்தை வியாபாரிகள் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், கடைகளை அமைக்க முடியவில்லை. இதனால் திரண்ட 200-க்கும் மேலான வியாபாரிகள், வாரச்சந்தை வளாகத்தில் அமர்ந்து, கட்டுமானப் பணிகள் நடைபெறவிடாமல் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

தகவல் கிடைத்ததும் நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன், வருவாய் ஆய்வாளர் நாகராஜ் போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கட்டுமானப்  பணிகள் முடியும் வரை மாற்று இடத்தில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து, கட்டுமானப் பொருள்களை ஒதுக்கி வைக்குமாறு ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் வியாபாரத்தை தொடங்கினர் சந்தை வியாபாரிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com