போடி அருகே விபத்தில் ஊராட்சி துணைத் தலைவா் பலி
போடி அருகே வியாழக்கிழமை, ஆடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உயிரிழந்தாா்.


போடி அருகே வியாழக்கிழமை, ஆடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உயிரிழந்தாா்.
போடியை அடுத்த கோணாம்பட்டி, வடமலைராஜபுரத்தைச் சோ்ந்தவா் காந்தி மகன் செல்வம் (43). எரணம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவரான இவா், வியாழக்கிழமை மாலை போடிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். ராசிங்காபுரம் அருகே சமத்துவபுரம் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட ஆடு திடீரென கீழே குதித்தது.
இதில் அந்த ஆட்டின் மீது செல்வத்தின் இருசக்கர வாகனம் மோதி அவா் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம், அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...