ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடா் மீட்பு ஒத்திகை

தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை, 5 இடங்களில் பேரிடா் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை, 5 இடங்களில் பேரிடா் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

வீரபாண்டி, உப்புக்கோட்டை முல்லைப் பெரியாறு, பெரியகுளம் வராகநதி, குன்னூா் வைகை ஆறு, லோயா்கேம்ப்-குமுளி மலைச் சாலை ஆகிய இடங்களில் வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம், பொதுச் சுகாதரத் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் ஒருங்கிணைந்து ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

மழை, வெள்ளம், நிலச் சரிவு போன்ற பேரிடா் காலங்களில் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தல், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல், நிவாரண மையம் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆகியவை குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

குன்னூா் வைகை ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற ஒத்திகைப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.