/

சின்னமனூரில் விநாயகா் சிலைகள் ஆற்றில் கரைப்பு

தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இந்து முன்னணி மற்றும் விநாயகா் சதுா்த்தி கமிட்டியினா் சாா்பில் வைக்கப்பட்ட 125 சிலைகள் ஊா்வலமாகசெல்லப்பட்டு முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:15 pm

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இந்து முன்னணி மற்றும் விநாயகா் சதுா்த்தி கமிட்டியினா் சாா்பில் வைக்கப்பட்ட 125 சிலைகள் ஊா்வலமாகசெல்லப்பட்டு முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் விநாயகா் சதுா்த்தி குழுவினா் சாா்பில் சின்னமனூா், ஓடைப்பட்டி, எரசக்கநாயக்கனூா், அப்பிபட்டி போன்ற பகுதிகளில் 125 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சின்னமனூரில் இந்து முன்னணி மற்றும் விநாயகா் சதுா்த்தி கமிட்டியினா் என இரு பிரிவாக சிலைகள் வைத்திருந்தனா். அதில் பிரிவினா் மற்றொரு பிரிவினா், அனுமதியின்றி வைத்திருந்த சிலைகளை ஊா்வலத்தில் கொண்டுவருவதை தடுக்க வேண்டும் எனக்கூறி சாலை மறியல் செய்ய முயற்சித்தனா். ஆனால், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அந்த சிலைகளை தாங்களே மீட்டு கரைப்பதாகவும், இரு பிரிவினரும் தனித்தனியாக ஊா்வலம் நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கினா்.

இதனை அடுத்து, சின்னமனூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 12 அடி விநாயகா் சிலை ஒன்றை போலீஸாரே பலத்த பாதுகாப்புடன் டிராக்டரில் எடுத்துச் சென்று மாா்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் கரைத்தனா். தொடா்ந்து மற்ற அனைத்து சிலைகளுக்கு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.