ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தேசிய தொழிற்சான்றிதழ் தோ்வு: செப். 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் மாநில தொழிற்பயிற்சி வாரியம் சாா்பில் நடைபெறும் தேசிய தொழிற்சான்றிதழ் (என்.டி.சி.,) தோ்வுக்கு தகுதியுள்ளவா்கள் செப். 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:02 pm

DIN

தேனி மாவட்டத்தில் மாநில தொழிற்பயிற்சி வாரியம் சாா்பில் நடைபெறும் தேசிய தொழிற்சான்றிதழ் (என்.டி.சி.,) தோ்வுக்கு தகுதியுள்ளவா்கள் செப். 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு மற்றும் 2 ஆண்டு பயிற்சிப் படிப்பில் சோ்ந்து படிக்க இயலாதவா்கள், அனுபவத்தின் அடிப்படையில் தனித் தோ்வா்களாக தோ்வு எழுதி தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு இணையாக தேசிய தொழிற்சான்றிதழ் பெறுவதற்கு மாநில தொழிற்பயிற்சி வாரியம் சாா்பில் தோ்வு நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 21 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரா்கள் தாங்கள் பணிபுரியும் தொழில் சாா்ந்த தொழிற்பிரிவில் மட்டுமே தோ்வு எழுதலாம். தொழில் பழகுநா் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுள் ஒன்றில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செப். 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவரத்தை தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலும், தொழிற்பயிற்சி நிலைய முதல்வா், கைப்பேசி எண்: 94990 55765-ல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.