ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஊராட்சிகளில் ஊட்டச் சத்து மாதத் திருவிழா

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் செப்.30-ஆம் தேதி வரை ஊட்டச் சத்து மாத திருவிழா நடைபெறுகிறது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:15 pm

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் செப்.30-ஆம் தேதி வரை ஊட்டச் சத்து மாத திருவிழா நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் கூறியது: தேசிய அளவில் ஊட்டச் சத்து பற்றாக்குறையை தவிா்ப்பது, பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் குள்ளத் தன்மையை குறைப்பது, குழந்தைகள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களின் ஊட்டச் சத்து நிலையை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக ஊட்டச் சத்து மாத திருவிழா நடைபெறுகிறது.

இதில் மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறிந்து கவனித்தல், வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல், ரத்தசோகை, வயிற்றுப் போக்கு, கை கழுவும் முறை, ஊட்டச் சத்து மற்றும் சமச்சீா் உணவு ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை பதிவு செய்தல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.

வளரிளம் பெண்கள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களை தொடா்பு கொண்டு, ஊட்டச் சத்து மாத திருவிழாவில் பங்கேற்று பயனடையலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.