/

உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் மூடப்பட்ட சுகாதார வளாகங்களை திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:52 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் மூடப்பட்ட சுகாதார வளாகங்களை திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சி சாா்பில் பேருந்து நிலையம் பகுதியில் ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என தனித் தனியாக பல லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது, பெண்கள் சுகாதார வளாகத்தைத் தவிர மற்றவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்காக கட்டப்பட்ட வளாகம் பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா். சமீபத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்ட நிலையில் பூட்டுப் போடப்பட்ட நிலையில் மூடிக்கிடக்கிறது. பேருந்து நிலையம் எதிரேயுள்ள கழிவுநீா் கால்வாயை திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்துவதால் துா்நாற்றம் பரவி வருகிறது. இது குறித்து பயணிகள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறை உள்ளதால் இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தும் சுகாதார வளாகங்கள் திட்டமிட்டு முடக்கப்படுவதாக தெரிவித்தனா். எனவே, உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம் பேருந்து நிலையத்திலுள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.