/

போடியில் பழைய இரும்புக் கடையில் திருட்டு

போடியில் திங்கள்கிழமை அதிகாலை, பழைய இரும்புக் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:18 am

DIN

போடியில் திங்கள்கிழமை அதிகாலை, பழைய இரும்புக் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போடி - மூணாறு சாலையில் டி.எஸ்.பி. அலுவலகம் அருகே பழைய இரும்பு கடை உள்ளது. இங்கு பழைய இரும்பு பொருள்கள் மட்டுமின்றி பித்தளை, தாமிர கம்பிகள் உள்ளிட்டவையும் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளா் சையது, திங்கள்கிழமை மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து சையது அளித்தப் புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலையத்திற்கு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடந்த வாரம் போடி ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அடுத்தடுத்த 6 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.